அமைச்சர்களுக்கு இன்று துறைகள் ஒதுக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா

அமைச்சர்களுக்கு வியாழக்கிழமை துறைகள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கு இன்று துறைகள் ஒதுக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா

அமைச்சர்களுக்கு வியாழக்கிழமை துறைகள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
 கடந்த 25 நாள்களாக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் அமைச்சரவையில் அவரைவிட்டால் யாருமில்லாமல் இருந்தனர். இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையை முதல்வர் எடியூரப்பா ஆக.20 ஆம் தேதி விரிவாக்கம் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோக், சுயேச்சை எம்எல்ஏ எச்.நாகேஷ், எம்எல்ஏ அல்லாத லட்சுமண்சவதி, எம்எல்சியான கோட்டா சீனிவாஸ் பூஜாரி, எம்எல்ஏக்கள் கோவிந்த் கார்ஜோள், சி.என்.அஸ்வத் நாராயணா, பி.ஸ்ரீராமுலு, எஸ்.சுரேஷ்குமார், வி.சோமண்ணா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, ஜே.சி.மதுசாமி, சி.சி.பாட்டீல், பிரபு சவாண், சசிகலா ஜொள்ளே அன்னாசாஹிப் ஆகிய 17 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகத்தில் 21 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொது சொத்துகள், பொதுமக்களின் சொத்துகள் சேதமடைந்திருப்பதைத் தொடர்ந்து, உடனடியாக வெள்ளநிவாரணப்பணிகளை கவனிப்பதற்கு அமைச்சர்களுக்கு முதல்வர் எடியூரப்பா வழிகாட்டுதல் வழங்கியுள்ளார். இதைதத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார். ஆனால், புதிய அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்காமல் உள்ளார்.
 இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறுகையில்," புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு வியாழக்கிழமை(ஆக.22) அல்லது ஓரிரு நாட்களில் துறைகள் ஒதுக்கப்படும்" என்றார் அவர். கர்நாடகத்தில் முதல்வர் உள்பட 34 பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்துக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது. தற்போது முதல்வர் எடியூரப்பா உள்பட 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதால், இன்னும் 16 இடங்கள் காலியாக உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com