பிஎம்சி வங்கியில் இருந்து முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற சுமார் 78 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி: நிர்மலா சீதாராமன்

பிஎம்சி வங்கியில் இருந்து சுமார் 78 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிஎம்சி வங்கியில் இருந்து முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற சுமார் 78 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் நடைபெற்ற ரூ. 4,355 கோடி மோசடி அம்பலமானதையடுத்து அதன் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பா் முதல் ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில், பிஎம்சி வங்கியில் இருந்து சுமார் 78 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்களில் சுமார் 78 சதவீதம் பேர் இப்போது தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்கியை வழிநடத்தியவர்களைப் பொறுத்தவரை, அவர்களது இணைக்கப்பட்ட சொத்துக்களை சில நிபந்தனைகளின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே அந்த சொத்துக்களை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com