உன்னாவ் பெண் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி சந்திப்பு!

உன்னாவ்வில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்தார்.
உன்னாவ் பெண் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி சந்திப்பு!


உன்னாவ்வில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்தார்.  

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் 5 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தப் பெண் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதே நாட்டை உலுக்கிய நிலையில், உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை இன்று நேரில் சென்று சந்தித்தார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமால் லல்லுவும் சென்றிருந்தார். இந்தச் சந்திப்பின்போது அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என அவர்களிடம் பிரியங்கா காந்தி உறுதியளித்தார்.

முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து யோதி ஆதித்யநாத் அரசின் சட்டம் ஒழுங்கை விமரிசித்து ட்வீட் செய்த பிரியங்கா காந்தி,

"அந்தப் பெண்ணுக்கு நீதியை வழங்க முடியாதது நாம் அனைவரின் தோல்வியாகும். ஒரு சமூகமாக நாம் அனைவரும் தவறு இழைத்தவர்கள். அதேசமயம், இது உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கையும் வெளிப்படுத்துகிறது.

உன்னாவ் நகரின் முந்தைய சம்பவத்தை மனதில் கொண்டு, அரசு ஏன் இந்தப் பெண்ணுக்கு உடனடிப் பாதுகாப்பை வழங்கவில்லை? முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கிறது. இதுகுறித்து அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com