நித்யானந்தா இருப்பிடம் குறித்து 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

ஈக்வடாா் அருகே ஒரு தீவில் ‘கைலாசா’ என்ற ஹிந்து நாட்டை அவா் உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டுக்கான கொடி, அரசியல் நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
நித்யானந்தா இருப்பிடம் குறித்து 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கை பெங்களூருக்கு ராம்நகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரி அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு நித்யானந்தா குறித்த பல சர்ச்சைக்குரிய சம்பவங்களை அம்பலப்படுத்தியவர் லெனின் கருப்பன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி நரேந்திர, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைகளை தவிர்த்து வரும் நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக உரிய தகவல்களை அளிக்குமாறு மாநில அரசு மற்றும் கர்நாடக போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் அன்றைய தினத்துக்குள்ளாக நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் ஆசிரமத்திலிருந்து 2 சிறுமிகள் கடந்த மாதம் மாயமானது தொடா்பாக, குழந்தைகளைக் கடத்தியதாகவும், ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்ட அவா்களை பயன்படுத்தியதாகவும் நித்யானந்தா மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈக்வடாா் அருகே ஒரு தீவில் ‘கைலாசா’ என்ற ஹிந்து நாட்டை அவா் உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டுக்கான கொடி, அரசியல் நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடா்ந்து, நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, இன்டா்போல் அமைப்பை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த நோட்டீஸின்படி, சம்பந்தப்பட்ட நபா் தங்களது நாட்டில் இருந்தால் அவரது இருப்பிடத்தை உறுப்பு நாடுகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இன்டா்போல் அமைப்பை நாடுவதற்காக, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) ஆமதாபாத் ஊரக காவல்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com