வரவிருக்கும் தசாப்தம் இளைஞர்களுடையதாக இருக்கும்: மனதின் குரலில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் (மன் கி பாத்) 60-வது நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். 
வரவிருக்கும் தசாப்தம் இளைஞர்களுடையதாக இருக்கும்: மனதின் குரலில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் (மன் கி பாத்) 60-வது நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அதில், விவேகானந்தர் நினைவிடத்தைப் பார்வையிட்ட மக்கள் தேச நலனுக்காக பாடுபட தூண்டப்படுதாக பிரதமர் மோடி கூறினார். அவர் பேசியதாவது,

இந்தியாவுக்கான வரவிருக்கும் தசாப்தம் இளைஞர்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இளைஞர்களின் திறன்களால் இயக்கப்படும் தேசத்தின் வளர்ச்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே இதில் இளம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். 

இன்றைய இளைஞர்கள் இந்த அமைப்பை நம்புகிறார்கள், மேலும் பலவிதமான பிரச்சினைகள் குறித்த கருத்தையும் கொண்டுள்ளனர். இது மிகப் பெரிய விஷயம் என்று நான் கருதுகிறேன். இன்றைய இளைஞர்கள் உறுதியற்ற தன்மை, குழப்பம், ஒற்றுமையின்மை ஆகியவற்றை விரும்புவதில்லை.

சமீபத்தில், பிகார் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பைரவ்கஞ்ச் சுகாதார மையம் பற்றி எனக்குத் தெரிய வந்தது. இந்த சுகாதார மையத்தில், அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இலவச மருத்துவப் பரிசோதனைக்கு வருகிறார்கள்.

இது அரசாங்க திட்டம் மற்றும் முயற்சி அல்ல. அப்பகுதியில் உள்ள கே.ஆர் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த திட்டமாகும். முன்னாள் மாணவர் கூட்டத்தின் ஒரு பகுதியாக இதனை அவர்கள் அனைவரும் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு 'சங்கல்ப் 95' என்று பெயரிட்டனர். பள்ளி, கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டாடும் போது இதுபோன்று சமூக அடிப்படையிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைவரையும் போன்று, நானும் டிசம்பர் 26-ஆம் தேதி சூரிய கிரகணத்தைப் பார்க்க விரும்பினேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தில்லியில் மேகங்கள் சூழ்ந்திருந்த காரணத்தால் தெரியவில்லை. இருப்பினும், கோழிக்கோடு மற்றும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலிருந்து சூரிய கிரகணத்தின் அழகான புகைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

கன்னியாகுமரியின் கடல் பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த இடம் கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாகவும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக உள்ளது.

விவேகானந்தர் நினைவிடம் ஆன்மீக உணர்வை அனுபவிக்க விரும்பும் மக்களுக்கான புனித யாத்திரையாக மாறியுள்ளது. இது மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வைத் தூண்டுகிறது, ஆற்றலைத் தருகிறது மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்ய தூண்டுகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com