16வது மக்களவையின் கடைசி நாளில் பிரதமர் மோடியின் அசத்தலான பேச்சு!

16வது மக்களவையின் கடைசி நாளில் பிரதமர் மோடியின் அசத்தலான பேச்சு!

பதினாறாவது மக்களவையின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்.


புது தில்லி: பதினாறாவது மக்களவையின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்.

மிக நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், நாட்டு மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மக்களவையை மிகச் சிறப்பாக வழி நடத்திய அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 

என்னுடன் பணியாற்றிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. நிச்சயமாக எனது அரசின் புகழ்பாடவில்லை. மத்திய அரசு செய்த பணிகளை எடுத்துக் கூற உள்ளேன்.

மக்களவையில் இதுவரை 219 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் கருப்பு பண ஒழிப்பு சட்டம் உட்பட 203 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தைப் பிடித்துள்ளது. 17 கூட்டத் தொடர்களில் 8 கூட்டத் தொடர்கள் 100 சதவீதம் முழுமையாக செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com