எல்லை கண்காணிப்புக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள்

எல்லை கண்காணிப்புக்கு அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன;


எல்லை கண்காணிப்புக்கு அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கூடுதல் தலைமை இயக்குநர் ஏ.கே.சர்மா தெரிவித்தார்.
அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதியை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பதற்காக, ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை கட்டமைப்பை (சிஐபிஎம்எஸ்) ஏற்படுத்தும் திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டம், சுமார் 2,000 கிமீ தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 
இதன்படி, எல்லை கண்காணிப்புக்கு உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எல்லையில் ஊடுருவும் நபர்களை கண்டறிவதற்காக, அதிநவீன கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டு வருகின்றன. ஜம்மு உள்ளிட்ட சில பகுதிகளில் ஏற்கெனவே இக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் பணிகள், அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். அதன் பிறகு, எல்லை கண்காணிப்பு நடவடிக்கை, தொழில்நுட்பரீதியில் வலுவடையும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com