எல்லையில் 3 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய 3 இடங்களில் இந்திய ராணுவ நிலைகள்


ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய 3 இடங்களில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய மன்கோட், கிருஷ்ண காட்டி ஆகிய பகுதிகளில் சிறிய ரக ஆயுதங்கள், மோட்டார் குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். மன்கோட் பகுதியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல், ரஜௌரி மாவட்டத்தின் நௌஷேரா பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்றார் அந்த அதிகாரி.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூன் வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் 1,248 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதில், ஜனவரியில் 203, பிப்ரவரியில் 215, மார்ச்சில் 267, ஏப்ரலில் 234, மே மாதத்தில் 221, ஜூனில் 108 அத்துமீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com