ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. 


ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. 
தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்றது.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்ததாக முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். யூபிஎஸ்சிஆன்லைன் இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 1 முதல் 16-ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும்.
முதன்மைத் தேர்வு தொடங்குவதற்கு 3 அல்லது 4 வாரங்களுக்கு முன்பு, மாணவர்களுக்கான இ-நுழைவுச் சீட்டு, தேர்வு கால அட்டவணை ஆகியவை யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய அரசின் உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக பதவியேற்பார்கள்.
தேர்வு நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்கள் பெற்ற மதிப்பெண், கட் ஆஃப் மதிப்பெண், விடைக் குறிப்பு உள்ளிட்டவை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com