வெளிநாடுகளின் சிறைகளில் 8,189 இந்திய கைதிகள்: வெளியுறவு அமைச்சகம்

பல்வேறு வெளிநாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் 8,189 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளின் சிறைகளில் 8,189 இந்திய கைதிகள்: வெளியுறவு அமைச்சகம்

பல்வேறு வெளிநாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் 8,189 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் 8,189 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருபவர்களும் இதில் அடங்குவர்.
அதிகப்பட்சமாக சவூதி அரேபியா நாட்டின் சிறைகளில் 1,811 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் சிறைகளில் 1,392 பேரும், நேபாள நாட்டின் சிறைகளில் 1,160 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், பல்வேறு நாடுகளிலும் தனிநபர் ரகசியம் தொடர்பாக வலுவான சட்டங்கள் இருப்பதால், அந்நாடுகள் சிறைகளில் கைதிகளாக இருப்போர் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம், அந்நாட்டு அரசிடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குறித்த தகவலை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பொது மன்னிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் விடுதலை பெற்று தரப்படுகிறது. 
2016ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும், இந்தியர்கள் 3,087 பேருக்கு பொது மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு ஆகியவற்றை வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் வழங்கியுள்ளன என்று அந்தப் பதிலில் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com