அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் வலுவான பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத்

"அடுத்த 10 ஆண்டுகளில், உலகின் வலுவான பொருளாதார முன்னேற்றம் நிறைந்த அமெரிக்கா, ரஷ்யா,  சீனா ஆகிய 3 நாடுகளில் ஒரு நாடாக இந்தியா முன்னேறும்' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  
கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, ஜம்மு-காஷ்மீர்  மாநிலம், கார்கில் மாவட்டத்தில் உள்ள  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, ஜம்மு-காஷ்மீர்  மாநிலம், கார்கில் மாவட்டத்தில் உள்ள  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

"அடுத்த 10 ஆண்டுகளில், உலகின் வலுவான பொருளாதார முன்னேற்றம் நிறைந்த அமெரிக்கா, ரஷ்யா,  சீனா ஆகிய 3 நாடுகளில் ஒரு நாடாக இந்தியா முன்னேறும்' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  

கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.                                                                             
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம் உஜ் பகுதியிலும், சம்பா மாவட்டம் பசந்தரிலும் எல்லைப்புற சாலைகள் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட பாலங்களை  ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். 

1999ஆம் ஆண்டு கார்கில் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். கார்கில் போர் நினைவாக, அங்கு வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் மாலை அணிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, இரண்டு பாலங்களை திறந்து வைத்து  அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காஷ்மீர் பிரச்னைக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும். அதை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லையென்றால், அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். 

இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இங்குள்ள "தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம்' நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது அழைப்பு விடுத்திருந்தேன்.  ஆனால், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. 

பிரிவினைவாத தலைவர்கள் காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், காஷ்மீரின் இளைஞர்களுக்கு எந்த வகையான சுதந்திரம் வேண்டும் என்று சொல்லத் தவறிவிட்டனர். 

அவர்களுக்கு  எந்த நாடு முன்மாதிரியாக உள்ளது. அவர்கள் பாகிஸ்தான் போன்ற நாட்டின் சுதந்திரத்தை விரும்புகிறார்களா அத்தகைய சுதந்திரத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

காஷ்மீரை நரகமாக்கிய பயங்கரவாதிகள், தற்போது வெற்றிகரமான பலத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். 

காஷ்மீர் ஒரு சொர்க்கம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மீண்டும் ஒரு சொர்க்கமாக மாறும். இராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் தங்கள் கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

எந்தவொரு பிராந்தியத்தின், மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவது இன்றியமையாதது. இந்தியா ஒவ்வொரு துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்து வரும் 10 ஆண்டுக்குள், உலகின் வலுவான பொருளாதார முன்னேற்றம் நிறைந்த அமெரிக்கா, ரஷ்யா,  சீனா ஆகிய நாடுகளில் ஒரு நாடாக இந்தியா முன்னேறும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com