பாகிஸ்தான் தாக்குதல்: பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கடந்த வர்த்தகம் ரத்து

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியைக் கடந்து நடைபெறும் வர்த்தகம் புதன்கிழமை ரத்து செய்யப்பட


பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியைக் கடந்து நடைபெறும் வர்த்தகம் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கடந்த வர்த்தக மையம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் வீசிய 5 குண்டுகள் அந்த வர்த்தக மையத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தியது. புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அந்தத் தாக்குதல் நடைபெற்றது என்றும், அந்த சமயத்தில் எல்லை கடந்து வந்த லாரிகளை சோதனை செய்யும் பணி நடைபெற்று வந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குண்டுவீச்சு காரணமாக, வர்த்தக மையத்தில் இருந்தவர்களிடையே பீதி ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் வர்த்தக நடவடிக்கைகள் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான ராவலாகோட் பகுதிக்கும், பூஞ்ச் மாவட்டத்துக்கும் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரம்தோறும் செவ்வாய் முதல் புதன்கிழமை வரையில் இந்த வர்த்தகம் நடைபெறும். இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com