கோவா: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறது பாஜக

கோவா சட்டப் பேரவையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. இது தொடர்பாக
கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை இரவு முதல்வராகப் பதவியேற்ற பிரமோத் சாவந்த்.
கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை இரவு முதல்வராகப் பதவியேற்ற பிரமோத் சாவந்த்.


கோவா சட்டப் பேரவையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. இது தொடர்பாக மாநில ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்ததை அடுத்து, அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 14 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், பேரவையில் தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இந்நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கோவா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை புதன்கிழமை பகல் 11.30 மணியளவில் நடத்த ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கோவா முதல்வராக திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு (இரவு 2 மணியளவில்) பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார். அரசியல் குழப்பத்தை தவிர்க்கவே அவர் நள்ளிரவில் பொறுப்பேற்றதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவையில் இப்போது 36 உறுப்பினர்களே உள்ளனர். இதில் 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக பாஜக கூறியுள்ளது. பாஜகவில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவற்றில் தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது தவிர 3 சுயேச்சை உறுப்பினர்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். 
கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி எம்எல்ஏ சுதின் தவாலிங்கர் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது. எனவே, பெரும்பான்மையை நிரூபிப்பதில் பிரச்னை இருக்காது என்றே தெரிகிறது. பாரிக்கர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர்கள் யாரும் இல்லை. இப்போது, கூட்டணிக் கட்சிகளை தக்கவைப்பதற்காக துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com