மோடி புகைப்படம் கொண்ட ரயில் டிக்கெட்டுகள் பயன்படுத்தப்படாது: ரயில்வே முடிவு

தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட ரயில் டிக்கெட்டுகளை பயன்படுத்தும் முடிவை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. 

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ரே மற்றும் சந்தன் மித்ரா ஆகியோர் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் அளித்திருந்தது. அந்த புகாரில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், அரசு திட்டத்தின் அங்கமாக ரயில் டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன என்றனர். 

இதற்கு அடுத்த தினமான இன்றே, பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட ரயில் டிக்கெட்டுகளை பயன்படுத்தும் முடிவை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com