மக்களவைத் தேர்தல்: பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து கண்ணையா குமார் போட்டி

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பிகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 
மக்களவைத் தேர்தல்: பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து கண்ணையா குமார் போட்டி


ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பிகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

பிகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 40 தொகுதிகள் உள்ளது. 

இந்நிலையில், அங்கு நேற்று (சனிக்கிழமை) கூட்டணி இறுதியானது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 3 தொகுதிகிளிலும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 தொகுதிகளிலும், விகாஷீல் இன்சாப் கட்சி 3 தொகுதிகளிலும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. 

இந்நிலையில் அம்மாநில பெகுசாராய் தொகுதியில் ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து கண்ணையா குமார் போட்டியிடவுள்ளார். 

யார் இந்த கண்ணையா குமார்?

2016-இல் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி தேசத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக அவர் மீது தேச விரோத வழக்கு பதியப்பட்டது. அதன்மூலம், அவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். அதன்பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள கண்ணையா குமார் தனது சிந்தாந்த ரீதியிலான பேச்சுகளால் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.  2016-இல் ஒரு நிகழ்ச்சியில், இடதுசாரி சிந்தனையும், தலித்திய சிந்தனையும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று பேசியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com