பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள், காங்கிரஸுக்கு ஏடிஎம் மெஷின் போன்றது: பிரதமர் மோடி தாக்கு

முந்தைய காங்கிரஸ் அரசுகள் பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏடிஎம் மெஷின் போல் பயன்படுத்தினர் என்று பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார். 
பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள், காங்கிரஸுக்கு ஏடிஎம் மெஷின் போன்றது: பிரதமர் மோடி தாக்கு


முந்தைய காங்கிரஸ் அரசுகள் பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏடிஎம் மெஷின் போல் பயன்படுத்தினர் என்று பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார். 

பிரதமர் மோடி ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

"முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புப் படைகளின் தேவைகளில் 70 சதவீதம் இந்தியா வெளிநாடுகளையே சார்ந்து இருந்தது. பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஏடிஎம் மெஷின் போன்றது. அதற்காகவே, உள்நோக்கத்துடன் இந்த நடைமுறை கடைபிடித்து வரப்பட்டது. 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியாவுக்கு 150 ஆண்டு கால அனுபவம் இருந்தது. அதேசமயம் சீனாவுக்கு அப்போது எந்த அனுபவமும் கிடையாது. 

ஆனால், சீனா தற்போது பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ஏற்றுமதியாளராக உள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறான கொள்கைகளால் நாம் இறக்குமதியாளராக இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பாஜக இதை மாற்ற முயற்சித்தது. அதன் காரணமாக, பாதுகாப்புத் துறை உற்பத்தி 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 

குண்டு துளைக்காத கவச ஆடை வாங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 6 ஆண்டுகள் இழுத்தடித்தது. இதனால், ராணுவ வீரர்களின் உயிர் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் அடைந்திருந்த வளர்ச்சி விகிதத்தை தான் ஐக்கிய முற்போக்கு அரசு கடைபிடித்து வந்தது. அது தற்போது அதிகரித்துள்ளது. 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளின் கூட்டு மக்கள் தொகையை விட அதிகம். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை 50 கோடி இந்தியர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது" என்றார். 

சோலன் மாவட்டம் ஷிம்லா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. அங்கு பாஜக சார்பில் சுரேஷ் காஷ்யப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சோலன் சட்டப்பேரவை உறுப்பினர் ராம் ஷாந்தில் போட்டியிடுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளில் கடைசி கட்டத் தேர்தலாக வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com