உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி: கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு கொலீஜிய அமைப்பு பரிந்துரைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்


உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு கொலீஜிய அமைப்பு பரிந்துரைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 31 நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 
உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இருந்தபோதிலும், பதவி மூப்பு மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களின் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இதையடுத்து, அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரின் பெயர்களைக் கடந்த 9-ஆம் தேதி மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரைத்த கொலீஜியம் அமைப்பு, அத்துடன் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்குப் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com