நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்பு?

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்பு?


நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்ற போது, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சார்க் உறுப்பினர் என்பதன் அடிப்படையில் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த முறை பிம்ஸ்டெக் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகள், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருதாராக் கூட்டுறவு அமைப்பு எனும் "பிம்ஸ்டெக்". 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com