புது தில்லி பகுதியில்  இன்று போக்குவரத்து மாற்றம்: 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெறுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றியுள்ள
புது தில்லி பகுதியில்  இன்று போக்குவரத்து மாற்றம்: 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெறுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றியுள்ள புது தில்லி மாவட்ட பகுதி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் சுமார் 10 ஆயிரம் தில்லி போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, வெளிநாட்டு பிரமுகர்கள் செல்லும் வழித்தடத்தில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகை அருகேவுள்ள நார்த் பிளாக், சவுத் பிளாக், ரயில் பவன், வாயு பவன், சேனா பவன், டிஆர்டிஓ ஆகியவை வியாழக்கிழமை 2 மணிக்கு முன்கூட்டியே மூடப்படுகிறது.

பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமானமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைக்க உள்ளார். இதையொட்டி, தில்லி போக்குவரத்து போலீஸார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புது தில்லி மாவட்டப் பகுதியில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படுகிறது.

ஆகையால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் இந்தப் பகுதிகளை அந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும். ராஜபாதை, விஜய் சௌக் - குடியரசு தலைவர் மாளிகை, நார்த் அவென்யு, சௌத் அவென்யு, சர்ச் சாலை ஆகிய சாலைகள் பொதுப் போக்குவரத்துக்கு மூடப்படும். அக்பர் சாலை, தீன் மூர்த்தி மார்க், கிருஷ்ண மேனன் மார்க், பண்டிட் பந்த் மார்க், டால்கடோரா சாலை, குருத்வாரா ரகப்கஞ்ச் சாலை, தியாகராஜ் மார்க் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com