பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் சந்திப்பு: 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜெர்மனி அதிபர் வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். தில்லி விமானநிலையத்தில் அவரை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்றார்.
பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் சந்திப்பு: 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜெர்மனி அதிபர் வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். தில்லி விமானநிலையத்தில் அவரை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்றார். புதுதில்லியில் நடைபெறும் இந்தியா, ஜெர்மனி இடையிலான 5-ஆவது ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா பங்கேற்கின்றனர்.

அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. குறிப்பாக போக்குவரத்து, திறன் மேம்பாடு, பசுமை நகர்ப்புற இயக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய துறைகளில் இரு நாடுகளின் இடையிலான ஒத்துழைப்புக்கான பங்களிப்பு குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கேல் வெள்ளிக்கிழமை காலை மரியாதை செலுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com