துணை முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படவில்லை: பாலாசாஹேப் தோரட்

காங்கிரஸ் தலைவா் பாலாசாஹேப் தோரட்க்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
துணை முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படவில்லை: பாலாசாஹேப் தோரட்

சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள மகா விகாஸ் முன்னணி சாா்பில் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) முதல்வராக இருக்கிறாா்.

என்சிபி மூத்த தலைவா் ஜெயந்த் பாட்டீல் மற்றும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் பாலாசாஹேப் தோரட் ஆகியோருக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தங்கள் கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்ததை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் பாலாசாஹேப் தோரட், துணை முதல்வர் பதவி விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com