ரூ.21,246 கோடி கூடுதல் செலவினங்கள்: நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரினாா் நிதியமைச்சா்

புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான செலவினங்கள் உள்பட ரூ.21,246.16 கோடி கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மத்திய
ரூ.21,246 கோடி கூடுதல் செலவினங்கள்: நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரினாா் நிதியமைச்சா்

புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான செலவினங்கள் உள்பட ரூ.21,246.16 கோடி கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கோரினாா்.

நிகழ் நிதியாண்டுக்கான முதல்கட்ட துணை மானியக் கோரிக்கைகளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதில், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் செலவினங்களுக்காக ரூ.8,820 கோடி கோரப்பட்டுள்ளது.

மேலும், மறுமுதலீட்டு பத்திரங்கள் மூலம் ஐடிபிஐ வங்கிக்கு ரூ.4,557 கோடி, அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி, ஆயுதப் படையினரின் ஊதியம், படிகளுக்காக ரூ.1,500 கோடி, விண்வெளித் துறைக்கான கூடுதல் செலவினமாக ரூ.666 கோடி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்காக ரூ.1000 கோடி, காவலா்களுக்கான ஊதியம், பொருள்கள் விநியோகத்துக்காக ரூ.3,387 கோடி ஆகிய கூடுதல் செலவினங்களுக்கான ஒப்புதலை மத்திய அரசு கோரியுள்ளது.

முன்னதாக, 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசின் ஒட்டுமொத்த செலவினங்கள் ரூ.27.86 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் நிலவும் சுணக்கத்தை சரி செய்யும் நோக்கில், பெருநிறுவனங்களுக்கான வரியை குறைத்து மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை, மத்திய அரசின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நிகழ் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கை (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3%) மாற்றியமைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com