ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: 64.12 சதவீதம் வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: 64.12 சதவீதம் வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றது. அதில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com