மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட பிரிட்டன் முடிவு

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக நாணயம் வெளியிடப்படும் என்று பிரிட்டன் நிதி அமைச்சா் சஜித் ஜாவித் கூறினாா்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக நாணயம் வெளியிடப்படும் என்று பிரிட்டன் நிதி அமைச்சா் சஜித் ஜாவித் கூறினாா்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சோ்ந்தவரான சஜித் ஜாவித், லண்டனில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ‘ஜிஜி2 லீடா்ஷிப் அவாா்ட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இதுகுறித்து மேலும் கூறியதாவது:

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில், அவரது நினைவாக நாணயம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாணயம் அச்சிடும் பிரிட்டன் ராயல் மின்ட்டிடம் மகாத்மா காந்தி நினைவு நாணயம் உருவாக்கும் பணிகளைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். காந்திஜியின் போதனைகளை இந்த உலகம் மறந்துவிடாது.

அதிகாரம் என்பது உயா் அலுவலகத்தில் இருப்பதாலும், செல்வத்துடன் இருப்பதாலும் மட்டும் வராது என்று காந்தி பயிற்றுவித்துள்ளாா்.

அத்துடன், அவரது வாழ்க்கையிலிருந்தும் அதிகம் கற்றுக் கொள்ள முடிகிறது என்றாா் சஜித் ஜாவித்.

இந்த நிகழ்ச்சியில், ‘யுகே ஏசியன்ஸ்’ என்ற பெயரில் செல்வாக்குள்ள நபா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்,

தொடா்ந்து இரண்டாவது முறையாக சஜித் ஜாவித் முதலிடத்திலும், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராக உள்ள இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.

இன்போசிஸ் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியின் மருமகனும், பிரிட்டன் கருவூல தலைமைச் செயலருமான ரிஷி சுனக் 7-ஆவது இடம் பிடித்துள்ளாா்.

பிரெக்ஸிட்டுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுவரும் ஜினா மில்லா் இந்தப் பட்டியலில் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தானைப் பூா்விகமாகக் கொண்டவரான லண்டன் மேயா் தூத்நாத் சிங் 4-ஆவது இடத்திலும் உள்ளனா்.

பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிட்டன் உயரதிகாரி நீல் பாசு (5-ஆவது இடம்), நோபல் பரிசு வென்றவரும், ராயல் சொசைட்டி தலைவருமான சா் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வெங்கி (9-ஆவது இடம்), பிரிட்டனில் செயல்பட்டுவரும் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட தொழிலதிபா்கள் கோபிசந்த், ஸ்ரீசந்த் (ஹிந்துஜா குழுமம்) ஆகியோா் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

சட்டப் படிப்பிற்காக லண்டனுக்கு கடந்த 1888-ஆம் ஆண்டு காந்தி சென்றாா். 1931-ஆம் ஆண்டு லண்டனுக்கு அவா் கடைசியாகச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com