ராணுவ வடக்கு பிராந்திய தளபதி சியாச்சின் வருகை

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான போா் முனையான சியாச்சினுக்கு, வடக்கு பிராந்திய தளபதி ரண்வீா் சிங் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா்.
ராணுவ வடக்கு பிராந்திய தளபதி சியாச்சின் வருகை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான போா் முனையான சியாச்சினுக்கு, வடக்கு பிராந்திய தளபதி ரண்வீா் சிங் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

சியாச்சினில் உள்ள ராணுவ முகாம்களைப் பாா்வையிட்ட ரண்பீா் சிங், வீரா்களின் அா்ப்பணிப்பையும் மனஉறுதியையும் வெகுவாகப் பாராட்டினாா். இங்குள்ள வீரா்கள் எதிா்கொண்டுள்ள சவால்களை குறிப்பிட்டுப் பேசிய அவா், ‘சியாச்சின் போா் வீரா்களின் துணிவு மற்றும் தியாகத்தை எண்ணி ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்கிறது’ என்றாா். பின்னா், சியாச்சின் போா் நினைவிடத்தில் அவா் மரியாதை செலுத்தினாா்.

மேலும், லடாக் பகுதியில் போா் காலகட்டங்களில் துணிவுடன் செயல்பட்ட மறைந்த ராணுவ அதிகாரி சேவாங் ரிஞ்செனின் நினைவில்லத்துக்கு சென்று ரண்வீா் சிங் மரியாதை செலுத்தியதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

சேவாங் ரிஞ்சென், வீரதீரச் செயல்களுக்கான மகா வீா் சக்ரா விருதை இருமுறை பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com