சின்மயானந்த் மீதான பாலியல் புகார்: மாணவியிடம் மருத்துவமனையில் விசாரணை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த கல்லூரி மாணவியிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முன்னிலையில் மருத்துவர்கள் விசாரணை நடத்தினர்.


பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த கல்லூரி மாணவியிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முன்னிலையில் மருத்துவர்கள் விசாரணை நடத்தினர்.
அந்த மாணவி, பலத்த பாதுகாப்புடன் ஷாஜகான்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மருத்துவக் குழுவினர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தனக்கு நம்பிக்கையிருப்பதாகவும் சின்மயானந்த் புதன்கிழமை கூறினார்.
ஷாஜகான்பூரைச் சேர்ந்த அந்த சட்டக் கல்லூரி மாணவி, தன்னை சின்மயானந்த் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக, சமூக வலைத்தளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, மாயமான அந்த மாணவி, ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.
இதனிடையே, மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, சின்மயானந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை, தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச மாநில அரசு அமைத்தது. காவல் துறை ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையிலான அந்தக் குழு,  ஷாஜகான்பூர் சென்று அந்தப் பெண் தங்கியிருந்த கல்லூரி விடுதியின் அறையில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. சுமார் 8 மணி நேர சோதனைக்குப் பிறகு, சில ஆதாரங்களை சேகரித்துக் கொண்டு அந்த அறைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சீல் வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com