கச்சா எண்ணெய் விலை குறித்த அச்சம்: இந்திய ரூபாய் மதிப்பு 68 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 68 காசுகள் குறைந்து ரூ. 71.60 என்ற நிலையை எட்டியது.
கச்சா எண்ணெய் விலை குறித்த அச்சம்: இந்திய ரூபாய் மதிப்பு 68 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 68 காசுகள் குறைந்து ரூ. 71.60 என்ற நிலையை எட்டியது.

சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவே ரூபாயின் மதிப்பு சரிவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அந்த நிறுவனம் தனது உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது.

இது சர்வதேச செலாவணிச் சந்தையில் திங்கள்கிழமை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.54 என்று குறைந்தது. அது தொடர்ந்து மேலும் குறைந்து ரூ.71.63 ஆனது. நாளின் இறுதியில் ரூ.71.60 ஆக இருந்தது. இது வெள்ளிக்கிழமை மதிப்பைவிட 68 காசுகள் குறைவாகும். அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 71.95 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com