மேற்கு வங்கத்தில் ஏபிவிபி பேரணி தடுத்து நிறுத்தம்

மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டதை கண்டித்து, கொல்கத்தாவில்  திங்கள்கிழமை
கொல்கத்தாவில் ஏபிவிபி பேரணியைத் தடுத்து நிறுத்திய போலீஸார். நாள்: திங்கள்கிழமை.
கொல்கத்தாவில் ஏபிவிபி பேரணியைத் தடுத்து நிறுத்திய போலீஸார். நாள்: திங்கள்கிழமை.


மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டதை கண்டித்து, கொல்கத்தாவில்  திங்கள்கிழமை ஊர்வலம் சென்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோவை இடதுசாரி மாணவர் சங்கங்களைச் சேர்ந்த மாணவர்களும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின்போது ஏற்பட்ட மோதலில் அவர் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, கொல்கத்தாவின் கரியகாட் பகுதியில் இருந்து ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் நோக்கி ஏபிவிபி அமைப்பினர் திங்கள்கிழமை பேரணி நடத்தினர். இந்தப் பேரணி, காவல்துறையினரால் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.  
இதுதொடர்பாக பேரணியை நேரில் கண்டவர்கள் கூறுகையில், கரியகட் பகுதியில் இருந்து ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் நோக்கி ஏபிவிபி அமைப்பினர் பேரணியாக சென்றனர். மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தை நெருங்குவதற்கு 2 கி.மீ தொலைவிலேயே போலீஸாரால் அவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர். சாலைகளில் போலீஸார் அமைத்திருந்த தடுப்பு அரண்களை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதுடன், போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com