அருணாசல் விவகாரம்: 3 லட்சம் உலக வரைபடங்களை அழிக்க சீனா முடிவு

அருணாசலப் பிரதேசம், தைவான் ஆகியவற்றை தங்கள் நாட்டின் பகுதி என குறிப்பிடப்படாத 3  லட்சத்துக்கும் மேற்பட்ட உலக வரைபடங்களை அழிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளது.
அருணாசல் விவகாரம்: 3 லட்சம் உலக வரைபடங்களை அழிக்க சீனா முடிவு


அருணாசலப் பிரதேசம், தைவான் ஆகியவற்றை தங்கள் நாட்டின் பகுதி என குறிப்பிடப்படாத 3  லட்சத்துக்கும் மேற்பட்ட உலக வரைபடங்களை அழிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளது.
அருணாசலப் பிரதேச மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அந்த மாநிலத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்து சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்கள் யாரேனும் சென்றால், சீனா கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறது.
இதேபோல், தைவான் தீவையும் சீனா தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்த போக்கால், அந்நாட்டுக்கும் இந்தியா, தைவான் நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளை தவறாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்டிருந்த உலக வரைபடம், தைவானை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட வரைபடம் என மொத்தம் 30,000 உலக வரைபடங்களை அரசு அதிகாரிகள் கடந்த மாதம் அழித்தனர். இதேபோல் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான உலக வரைபடங்கள், நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய சிலர் திட்டமிட்டிருந்தனர். அதை குவாங்டாங் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பறிமுதல் செய்தனர். 
இந்த வரைபடங்கள் அனைத்தும் சீனாவின் பிராந்திய இறையாண்மையை சமரசம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. எனவே அந்த உலக வரைபடங்களை அழிப்பதற்கு, தெற்கு குவாங்டாங் மாகாண அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வரைபடங்களை நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த 4 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அருணாசலப் பிரதேச விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவும், சீனாவும் இதுவரை 21 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன. ஆனால் அந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com