தேர்தல் நடத்தை விதிமீறல்: சிவசேனை எம்.பி.க்கு நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் ஆசிரியராக இருக்கும் சஞ்சய் ராவத், ஞாயிற்றுக்கிழமை அந்நாளிதழில் வெளியான தலையங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான கன்னையா குமார் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும் எழுதியிருந்தார். 
அதில்,  கன்னையா குமார் விஷத்துக்கு சமம். அவரை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியாவது கன்னையா குமாரை தோற்கடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து, அவரது கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறி, இந்த விவகாரத்தில் புதன்கிழமைக்குள்(ஏப்ரல் 3) பதிலளிக்குமாறு சஞ்சய் ராவத்துக்கு மும்பை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவாஜி ஜோந்தாலே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
இது தொடர்பாக அந்த அதிகாரி கூறுகையில், எம்.பி. சஞ்சய் ராவத்தின் கருத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை கூறும் வகையிலும், தேர்தல் நடைமுறையை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. அதனால் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com