543 தொகுதிகளிலும் செய்தியாளர் சந்திப்பு: தேர்தல் அறிக்கையை பிரபலப்படுத்த காங்கிரஸ் திட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரபலப்படுத்த 543 தொகுதிகளிலும் காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ஆம் தேதி அறிவித்தார். இதன்மூலம், நாட்டில் உள்ள 20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தின் அறிவிப்பு அக்கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூறுகையில், 

"மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 543 தொகுதிகளிலும் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளனர். குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டத்தை கவனத்தில் கொள்ளவே இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் மூலம் இந்த திட்டம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com