அவர் என்னை கொல்ல முயற்சித்தார்: பிரசாரத்தில் கண்கலங்கிய ஜெயபிரதா

தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தான் தொகுதியை விட்டுச் சென்றதாக நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதா கூறியுள்ளார். 
அவர் என்னை கொல்ல முயற்சித்தார்: பிரசாரத்தில் கண்கலங்கிய ஜெயபிரதா

தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தான் தொகுதியை விட்டுச் சென்றதாக நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதா கூறியுள்ளார். 

கடந்த 2004 மற்றும் 2009 தேர்தல்களில் சமாஜவாதி கட்சி சார்பில் இங்கு களமிறங்கிய ஜெயபிரதா, வெற்றிபெற்றுள்ளார். ஆனால், 2014 தேர்தலின் போது ஆர்எல்டி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், சமீபத்தில் இணைந்த நடிகை ஜெயபிரதாவுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியை பாஜக மீண்டும் ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து அங்கு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, சமாஜவாதி கட்சித் தலைவர் ஆசாம் கான் தன்மீது ஆசிட் வீச முயற்சித்தும், கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தியதாலும் தான் ராம்பூர் தொகுதியை விட்டுச் சென்றதாகக் கூறி நடிகை ஜெயபிரதா கண்கலங்கினார்.

சமாஜவாதி கட்சி நிறுவனர்களில் ஒருவரான ஆசாம் கான், தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார். அவரும் அதே ராம்பூர் தொகுதியில் களமிறங்கவுள்ளார். 

மேலும் கடந்த காலங்களில் நடிகை ஜெயபிரதா குறித்து பல சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்ததால், ஆசாம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com