370 சட்டப்பிரிவை நீக்க நினைத்தால் தேசியக் கொடி இறக்கப்படும்: ஒமர் அப்துல்லா எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்க நினைத்தால் பிரதமர் நரேந்திர மோடி படுவீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அம்மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா பேசியதாவது:

ஹந்த்வாரா பூமியிலிருந்து நான் பிரதமர் மோடிக்கு ஒரு சவால் விடுகிறேன். முடிந்தால் 370 சட்டப்பிரிவை பாஜக நீக்கட்டும். ஆனால் அதன்பிறகு பிரதமர் மோடியின் படுவீழ்ச்சி உறுதி செய்யப்படும் என்று எச்சரிக்கிறேன்.

உங்களைப் போன்று எங்கள் நிலத்தை அழிக்க நினைத்த பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். இதில் மட்டும் யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். 

ஒருவேளை 370 சட்டப்பிரிவை நீக்கினால், இங்கிருந்து தேசியக் கொடி இறக்கப்படும். என்னுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் வாங்கிக்கொடுப்பேன் என்று ஒமர் அப்துல்லா சூளுரைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com