ஆந்திராவில் வாக்குப்பதிவின் போது வன்முறை: 2 பேர் பலி 

ஆந்திராவில் இன்று மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுன் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு
ஆந்திராவில் வாக்குப்பதிவின் போது வன்முறை: 2 பேர் பலி 

ஆந்திராவில் இன்று மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுன் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு கட்சியையும் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கடமையை செய்து வருகின்ரநர். 

இந்த தேர்தலில் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் சென்று அமராவதியில் வாக்களித்தார். 

இதனிடையே அனந்தபுரம் மாவட்டம் தாடி பத்திரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், தெலுங்கு தேச கட்டியினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த ஒருவரும், ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

வாக்குப்பதிவு எந்திரத்தில் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா என்ற பெயர் எழுத்துப் பிழையுடன் இருந்துள்ளது. பெயரும் மிக சிறியதாக எழுதப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்து கோபம் அடைந்த வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி போட்டு அங்கேயே உடைத்தார். வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது எழுத்துப் பிழையுடன் இருந்துள்ளதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர் மதுசூதன் குப்தாவை போலீஸார் கைது செய்தனர். 

இதுபோன்ற அசம்பாவிதங்களால் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com