தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்: ராஜ்நாத் சிங்

தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்: ராஜ்நாத் சிங்


தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், காந்திதாம் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலுபவர்களை நாம் மன்னித்து விட வேண்டுமா? எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமரை நியமிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவை திரும்பப் பெறப்படும். காஷ்மீர் பிரச்னைக்கு காரணம் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. சர்தார் வல்லபபாய் படேலுக்கு நேரு உரிய அதிகாரம் அளித்திருந்தால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும். ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று நாங்கள் உறுதியளிக்கவில்லை. இருப்பினும், ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். கடந்த 2007ஆம் ஆண்டே செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடம் இருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.  அந்த சமயத்தில் ரஷியா, சீனா, அமெரிக்கா மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை கொண்டிருந்தன. தற்போது, மோடி ஆட்சியில் மிஷன் சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com