சுடச்சுட

  

  திருடன் என்று மோடியை விமர்சித்த ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

  By ANI  |   Published on : 15th April 2019 12:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi-rahul

   

  ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

  பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தனது சொந்த கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல், தவறான கருத்துக்களை பரப்பி நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

  எனவே ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai