தென்மேற்குப் பருவ மழை சராசரியான அளவில் இருக்கும்: இந்திய வானிலை மையம்

நாட்டில் இந்த ஆண்டு வழக்கமான மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை சராசரியான அளவில் இருக்கும்: இந்திய வானிலை மையம்


புது தில்லி: நாட்டில் இந்த ஆண்டு வழக்கமான மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழையின் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கணித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஜூன் - செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு வழக்கமான அளவில் சராசரியாகப் பெய்யும்.

தற்போதைய நிலவரப்படி, தென்மேற்குப் பருவ மழை சராசரியாக 96% பெய்ய வாய்ப்பிருக்கிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவே பெய்யவும் வாய்ப்பு உள்ளது. 

எல் நினோ பலவீனத்தினால் பருவ மழை காலத்தின் இறுதிப் பகுதி வலுக்குறையும் வாய்ப்பும் உள்ளது. நிலப்பரப்பின் மீதான தெட்பவெப்பநிலை, பசிபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி என அனைத்தும் பருவ மழைக் காலத்தின் மீது எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் பரவலாக சராசரியான மழையைப் பெறும் என்றும், காரீப் விளைச்சலை நிச்சயம் இது உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

பருவ மழை குறித்து இது முதல் அறிவிப்பு என்றாலும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com