சுடச்சுட

  

  மகளிர் போலீஸாருக்கு மும்பை காவல்நிலையங்களில் சானிடரி நாப்கின் திட்டம்

  By ANI  |   Published on : 16th April 2019 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mumbai_police_sanitary_pad_machine

   

  மகளிர் போலீஸ்களுக்காக மும்பை காவல்நிலையங்களில் சானிடரி நாப்கின் திட்டத்தை மாநகர துணை ஆணையர் செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார்.

  மும்பை பெண் காவலர்களின் நலத்திட்டம் தொடர்பாக என்ஜிஓ அமைப்பின் துணையுடன் முதல்கட்டமாக மாநகரம் முழுவதும் உள்ள 93 காவல்நிலையங்களில் 140 சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மும்பை போலீஸ் தரப்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்தை தனது மனைவியுடன் தொடங்கி வைத்த பின்னர் மும்பை மாநகர போலீஸ் துணை ஆய்வாளர் நியதி தக்கர் கூறுகையில்,

  மும்பை போலீஸில் மொத்தம் 20 சதவீதம் பெண் காவலர்களால் நிரம்பியுள்ளது. எனவே பணியிடத்தில் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியாக, மாதவிடாய் காலங்களில் அடிப்படை சுகாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் கடந்த வாரம் காவல் நிலைய தலைமையகத்தில் முதல் சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டது. 

  பின்னர் தற்போது மும்பையின் 93 காவல்நிலையங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பெண்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai