மத ரீதியான பேச்சு: ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்யத் தடை

தேர்தல் பிரசாரத்தின்போது மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள்களும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 2 நாள்களும் பிரசாரம் செய்வதற்கு
மத ரீதியான பேச்சு: ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்யத் தடை

தேர்தல் பிரசாரத்தின்போது மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள்களும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 2 நாள்களும் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
 இதுதொடர்பாக, ஆதித்யநாத்துக்கும், மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தனித்தனியே உத்தரவு பிறப்பித்தது. அதில், ஆதித்யநாத், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 72 மணி நேரம் (3 நாள்கள்) பிரசாரம் செய்வதற்கும், மாயாவதி செவ்வாய்க்கிழமை காலை முதல் 48 மணி நேரம் (2 நாள்கள்) பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அவர்கள் இருவருக்கும் தேர்தல் ஆணையம் கண்டனமும் தெரிவித்துள்ளது. தேவ்பந்த் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மாயாவதி பேசும்போது, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இதேபோல், மீரட் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஆதித்யநாத் பேசும்போது மத ரீதியிலான கருத்துகளைக் கூறியிருந்தார்.
 மேனகா காந்தி, ஆஸம் கானுக்கும் தடை: இதேபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் 3 நாள்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாள்கள் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜெயப்ரதாவை விமர்சித்துப் பேசியதற்காக ஆஸம் கானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியதற்காக, மேனகா காந்தி பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com