தவறான தகவலை அளித்தார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தவறான தகவல்களை முந்தைய தேர்தலில் அளித்தார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்துவிட்டது.


பிரதமர் நரேந்திர மோடி தவறான தகவல்களை முந்தைய தேர்தலில் அளித்தார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்துவிட்டது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முந்தைய தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள நிலம் ஒன்றின் கால் பகுதிக்கு உரிமையாளர் என்று மோடி குறிப்பிட்டிருந்தார். பின்னர், அந்தத் தகவலை மாற்றி, அந்த நிலம் முழுவதற்கும்
உரிமையாளர் என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவன் கெரா தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்தது. இதுதொடர்பாக சுட்டுரையில் அக்கட்சி வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் பொய்யான தகவல்களை முன்வைத்து வருகிறது. மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் நிலம் தொடர்பாக இதுபோன்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு சொந்தமாக குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள நிலம் தொடர்பான விவரம் தற்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் இவ்வாறு குற்றம்சாட்டியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com