இந்தியாவுடன் காஷ்மீர் ஏன் இணைந்தது என மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்

இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் ஏன் இணைந்தது என்று மாநில மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி
இந்தியாவுடன் காஷ்மீர் ஏன் இணைந்தது என மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்

இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் ஏன் இணைந்தது என்று மாநில மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனந்த்நாக் மாவட்டம், கனபாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் காட்டாட்சி நடக்கிறது. அரசு அதிகாரி, ஊழியர்களை ராணுவ வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடுமையாக தாக்கியுள்ளனர். சிறைக் கைதிகளும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் சிதைக்கப்படுகின்றன. பின்னர் சில வகையான ரசாயன மூலம், அவை எரியூட்டப்படுகின்றன.
ஷேக் முகமது அப்துல்லா, மகாராஜா ஹரி சிங்கால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது இருந்தது போல இந்தியா தற்போது இல்லை. அப்போதைய இந்தியாவானது, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பிற மதத்தினருக்கான நாடாக இருந்தது.
தற்போது நடக்கும் அதிகப்படியான அடக்குமுறைகள், கொடுமைகள் காஷ்மீர் மக்களை அச்சமடைய செய்துள்ளது. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை ஏன் இணைத்தார்கள் என்று மாநில மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
எனது வாகனம் மீது திங்கள்கிழமை சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீஸாரை கேட்டுக் கொள்கிறேன். கல்வீச்சுத் தொடர்பாக யாரையாவது கைது செய்திருந்தால், அவர்களை விடுதலை செய்யும்படியும் போலீஸாருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றார் மெஹபூபா முஃப்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com