பணம் பறிமுதலில் நாம பெரிய ஆளுங்கன்னா.. அந்த விஷயத்தில் குஜராத்தான் மாஸ்!

தேர்தல் திருவிழா ஒரு வழியாக தமிழகத்தில் முடிந்துவிட்டது. இனி வாக்கு எண்ணிக்கைதான் பாக்கி. மே 19ம் தேதி 4 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தாலும் அது அந்த தொகுதிகளில் மட்டுமே முக்கிய விஷயமாக அமையும்.
பணம் பறிமுதலில் நாம பெரிய ஆளுங்கன்னா.. அந்த விஷயத்தில் குஜராத்தான் மாஸ்!


தேர்தல் திருவிழா ஒரு வழியாக தமிழகத்தில் முடிந்துவிட்டது. இனி வாக்கு எண்ணிக்கைதான் பாக்கி. மே 19ம் தேதி 4 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தாலும் அது அந்த தொகுதிகளில் மட்டுமே முக்கிய விஷயமாக அமையும்.

மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அமைதியாகவே நடந்து முடிந்தது.

தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியான நாள் முதல் வருமான வரித்துறையும், தேர்தல் பறக்கும் படையும் தீவிரமாக செயல்பட்டு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்களை வாக்காளர்களுக்கு வழங்குதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தியது.

ஆங்காங்கே லட்சத்தில் தொடங்கி கோடிகள் வரை ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, இந்தியா முழுவதும் நடந்த வாகனச் சோதனையில் ரூ.697 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அதே போல 219 கோடி மதிப்புள்ள மதுபானங்களும், 1,151 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்ற எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் 208.27 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அதாவது கைப்பற்றப்பட்ட 697 கோடியில் 208 கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு அடுத்த இடத்தில் ஆந்திர மாநிலம் ரூ.137 கோடி ரொக்கப் பணத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3ம் இடம் என்றால் அது தெலங்கானாதான். அங்கு வெறும் 68 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ரொக்கம் என அனைத்தின் மதிப்பும் எவ்வளவு தெரியுமா ரூ.514 கோடியாகும். அம்மாடியோவ். அவ்வளவா என்று வாயைப் பிளக்க வேண்டாம். குஜராத்தில் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட்.. அதாங்க வெறும் ரூ.543 கோடிதான். அது எப்படி 200 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்ட தமிழகத்தை விட குஜராத் அதிகமாச்சு என்பதுதானே உங்கள் கேள்வி.

பதில் இருக்கிறது வாருங்கள். குஜராத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு வெறும் ரூ.7 கோடிதான். ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 524  கோடியாகும். இதனால்தான் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.543 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் என அனைத்தின் மதிப்பு ரூ.2,632.73 கோடியாகும். பாவங்க.. இந்தியா ஏழை நாடு. அதான் இப்படி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com