பாஜக, காங்கிரஸின் கவர்ச்சி அறிவிப்புகளுக்கு இரையாக வேண்டாம்: மாயாவதி வேண்டுகோள்

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளியிடும் கவர்ச்சி அறிவிப்புகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்று வாக்காளர்களிடம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக, காங்கிரஸின் கவர்ச்சி அறிவிப்புகளுக்கு இரையாக வேண்டாம்: மாயாவதி வேண்டுகோள்

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளியிடும் கவர்ச்சி அறிவிப்புகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்று வாக்காளர்களிடம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் ஆஸம் கானுக்கு ஆதரவாக சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம். அந்த அறிக்கை முழுவதும் வெற்றுக் கவர்ச்சி அறிவிப்புகளால் நிறைந்துள்ளன.
அந்தக் கட்சி அறிவித்த "பொற்கால' வாக்குறுதி, அதற்கு முன்னர் காங்கிரஸ் அறிவித்த பல வாக்குறுதிகளைப் போன்ற வெற்று வாக்குறுதியாகத்தான் இருந்தது.
"அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி' என்ற பாஜகவின் தாரக மந்திரம், வெறும் வாய்ஜாலமாகிப் போனது.
பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் ஆகிய நடவடிக்கைகள், எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அவசர கதியில் கொண்டு வரப்பட்டன.
இதன் காரணமாக வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் பெருமளவில் அதிகரித்தன; சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
மேலும், இந்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் மந்தநிலையடைந்து, ஊழல்கள் பெருகியுள்ளன என்றார் அவர்.
கூட்டத்தில் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்டத் தேர்தலில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது என்றார்.
ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, மக்களுக்கு துன்பங்களை விளைவிப்பவர்கள் நேரம் வரும்போது அதற்கான பலனைப் பெறுவர் என்று அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல் 3 கட்ட வாக்குப் பதிவு முறையே ஏப்ரல் மாதம் 11, 18, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கின்றன. 7-ஆவது கட்ட இறுதி வாக்குப் பதிவு மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com