காங்கிரஸிடம் இருந்து இந்தியா விடுபடும்போது வறுமையும் இருக்காது:  ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நமது நாடு விடுபடும்போது வறுமையில் இருந்தும் முழுமையாக விடுபடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிடம் இருந்து இந்தியா விடுபடும்போது வறுமையும் இருக்காது:  ராஜ்நாத் சிங்


காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நமது நாடு விடுபடும்போது வறுமையில் இருந்தும் முழுமையாக விடுபடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் காங்கிரஸ் கட்சி எவ்வளவு பெரிய தவறுகளை எல்லாம் செய்து வந்துள்ளது என்பது தெரியவரும். முக்கியமாக, தேர்தலின்போது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் எதையும் முழுமையாக நிறைவேற்றியது இல்லை. 
நாட்டில் வறுமையை எவ்வாறு ஒழிக்க வேண்டும். வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடியிடம் இருந்து காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்தியா முழுமையாக விடுபடும் நாளில்தான், வறுமையில் இருந்தும் இந்தியா முழுமையாக விடுபடும்.
இந்தியாவை வலிமைமிக்க நாடாகவும், பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கும் நாடாகவும் உலக அரங்கில் நிரூபித்தது பாஜக அரசுதான். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை நமது விமானப்படை குண்டுகளை வீசி அழித்தது. ஆனால், அதில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இங்குள்ள சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு முழுவீச்சில் பதிலடி கொடுத்து வெற்றிகரமாக நமது விமானப்படை திரும்பியுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களின்போது எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை எந்த ராணுவமும் எண்ணிக் கொண்டு இருக்காது. ஆனால், ராணுவத் தாக்குதலை சந்தேகிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். 
1971-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்ததற்காக வெகுவாகப் பாராட்டப்படுகிறார். அதைவிட அதிரடியான பதிலடியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அளித்த நமது பிரதமர் மோடிக்கு ஏன் உரிய புகழைத் தரக்கூடாது? என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com