பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் விட்டார் சோனியா: அமித் ஷா குற்றச்சாட்டு

கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்த பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் சிந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா
மேற்கு வங்கம், பிர்பூமில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு வரவேற்பளித்த கட்சியினர்.
மேற்கு வங்கம், பிர்பூமில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு வரவேற்பளித்த கட்சியினர்.


கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்த பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் சிந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அதே சம்பவத்தில் உயிர்நீத்த காவலர்களுக்காக கண்ணீர் சிந்தவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அமித் ஷா திங்கள்கிழமை கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின்போது, கடந்த 2008-ஆம் ஆண்டு தில்லியில் பட்லா ஹவுஸ் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல காவலர்களும் உயிர் நீத்தனர். நாட்டுக்காக உயிர்நீத்த காவலர்களுக்காக வருந்தாமல், உயிரிழந்த பயங்கரவாதிகளுக்காக சோனியா காந்தி வருந்தினார். இது குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.
மம்தா மீது குற்றச்சாட்டு: இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மாஃபியா கும்பல்களை போல முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்வதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணாநகர் மற்றும் ஹெளராவில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா பொதுக்கூட்டங்களில் பேசியதாவது:
பசு கடத்தல் சம்பவங்களில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. மேலும், நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்களின் புகழிடமாகவும் மேற்கு வங்கம் உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ள சிலர், தங்களிடம் கட்டுமானப் பொருள்களை வாங்குமாறு ஒப்பந்தக்காரர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இவ்வாறு மாஃபியா கும்பலை போல மம்தா ஆட்சி செய்கிறார்.
ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று அங்கிருக்கும் தேசிய மாநாட்டு கட்சி நினைப்பது போல மம்தாவும் நினைக்கிறார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய  விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்து மம்தா கேள்வி எழுப்புகிறார். அந்த சம்பவத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளுக்காகவும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார். அவர்கள் என்ன மம்தாவின் உறவினர்களா? இது நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம்.
என்ஆர்சி கணக்கெடுப்பு: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)  கணக்கெடுப்பு நடத்தப்படும். சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவியர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை நிச்சயம் நீக்குவோம் என்று அமித் ஷா வாக்குறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com