காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு மே 24 வரை நீதிமன்றக் காவல் 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு மே 24 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு மே 24 வரை நீதிமன்றக் காவல் 

தில்லி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு மே 24 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக நிதியுதவி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. 

அதுமட்டுமன்றி பாதுகாப்பு படையினர் மீது கல் வீசித் தாக்குதல் நடத்துவது, அரசு சொத்துகளை சேதப்படுத்துவது உள்ளிட்டவற்றின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியும் பொருட்டு என்ஐஏ  விசாரணை நடத்தி வருகிறது. 

பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரங்களை கண்டறிவதற்காக, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களான ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக், சையது அலி ஷா கிலானி உள்பட பலரை என்ஐஏ விசாரித்து வருகிறது. 

முன்னதாக, இந்த வழக்கில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை விசாரணை செய்வதற்காக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மூலம் என்ஐஏ அமைப்பு அவரை காவலில் எடுத்தது. இதையடுத்து, அவர் கடந்தஹ் 9-ஆம் தேதியன்று திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தில்லி நீதிமன்றத்தில் வைத்து யாசின் மாலிக்கை என்ஐஏ அதிகாரிகள் கடந்தஹ் 10-ஆம் தேதி (புதன்கிழமை) கைது செய்தனர். அதையடுத்து சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, யாசின் மாலிக்கை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது. அதன் பின்னர், வரும் 22-ஆம் தேதி வரை யாசின் மாலிக்கை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக, யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு மே 24 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில் தில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் புதனன்று ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக்கை வரும் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com