தோல்வியடைந்தால் மட்டும் வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகம்: எதிர்க்கட்சியினர் மீது ஜாவடேகர் தாக்கு

தேர்தலில் தோல்வியடையும் சூழலில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என்று சந்தேகிக்கும் எதிர்க்கட்சிகள், தாங்கள் வெற்றி பெறும்போது மட்டும் அவ்வாறு சந்தேகிப்பதில்லை என்று
தோல்வியடைந்தால் மட்டும் வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகம்: எதிர்க்கட்சியினர் மீது ஜாவடேகர் தாக்கு

தேர்தலில் தோல்வியடையும் சூழலில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என்று சந்தேகிக்கும் எதிர்க்கட்சிகள், தாங்கள் வெற்றி பெறும்போது மட்டும் அவ்வாறு சந்தேகிப்பதில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும்போது மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகச் சரியாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
கேரளம், மேற்கு வங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களில் பிற கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் போதும் அந்த இயந்திரத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் வருவதில்லை.
ஆனால், தேர்தலில் தாங்கள் தோல்வியை சந்திக்கும்போது மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சியினருக்கு சந்தேகம் வருகிறது.
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்ததும் தில்லியிலும், மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு முடிந்ததும் மும்பையும் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று, அதன் காரணமாக தாங்கள் தோல்வியடைந்து விடலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். இது, அவர்களது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெறும். நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் கட்சியை ஆதரித்து மக்கள் வாக்களித்திருப்பார்கள்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்ததைவிட இந்த ஆண்டுத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது  என்றார் அவர்.
முன்னதாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெறக்கூடும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் மும்பையில் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்திருந்தனர்.
அதனைக் குறிப்பிட்டே அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com