பாதுகாப்புப் படைகள் குறித்து பிரசாரம்: தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை

தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்புப் படைகள் குறித்து அரசியல் கட்சியினர் பேசியது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்புப் படைகள் குறித்து பிரசாரம்: தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை

தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்புப் படைகள் குறித்து அரசியல் கட்சியினர் பேசியது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பாதுகாப்புப் படைகள் குறித்து பேசுவதை தவிர்க்கும்படி, அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி அறிவுறுத்தியிருந்தது. இதையும் மீறி, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பாதுகாப்புப் படைகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ததாக புகார்கள் வந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பாதுகாப்புப் படைகள் குறித்து பிரசாரக் கூட்டங்களில் பேசியதாக வந்துள்ள புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது, "பாதுகாவலர் திருடராகி விட்டார்' என்ற கருத்து குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
"மோடி ஜி கி சேனா' என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியிருந்தார். எதிர்காலத்தில் மிகவும் கவனமுடன் பேசும்படி அவரை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதே அறிவுரையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com