இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
By DIN | Published on : 26th April 2019 10:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்குப் பிறகுதான் பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஏதேனும் பொருட்களோ, பையோ இருந்தால் அங்கிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பயணிகளை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.