சுதந்திரமான பிரசாரம்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாகப் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாகப் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் வியாழக்கிழமை கூறுகையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பதிவு செய்யப்பட்ட பிரசார உரையை ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பப் போவதில்லை என அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது. எனது அந்த உரையில் ஹிந்துத்வா குறித்து இடம் பெற்றுள்ள கருத்துகளுக்கு அகில இந்திய வானொலி ஆட்சேபம் தெரிவித்துள்ளது. 
எனது பிரசார உரை ஏப்ரல் 18-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. ஆனால், அகில இந்திய வானொலியின் தணிக்கைக் குழுவினர் ஏப்ரல் 16-ஆம் தேதி இதுதொடர்பாக கையெழுத்திட்டிருப்பது கற்பனைக்கு எட்டாத வகையில் உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிகாரிகளால் தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகார தலைமைக்கு ஏற்ப இந்த அரசு ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக பிரசாரம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com